இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும்.
இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 – 85 ரூபாய் என பதிவாகியுள்ளது.
ரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் வெளிநாட்டு இருப்புகளை பாதுகாப்பதற்காக மத்திய வங்கியினால் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.