தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள்.தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்துசேரலாம்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர் கள். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும்.
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடையலாம்.
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். நன்மை செய்தாலும் அது மற்றவர்களுக் குத் தீமையாகத் தெரியும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டி கள் அகலும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்திதரும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோக அனுகூலம் உண்டு. வழக்குகள் சாதகமாக முடியும்.
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நிகழ்காலத் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணை வர். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக் குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
காலை நேரத்திலேயே கலகலப் பான செய்தி வந்து சேரும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். ஊக்கத் தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
முன்னேற்றம் காண முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
விரயங்கள் குறைய விழிப்பு ணர்ச்சியுடன் செயல்பட வேண் டிய நாள். தொழில், வியா பாரத்தில் மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவினர் தொல்லை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். அதிகாரிகளால் ஏற்பட்டஅல்லல் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலை தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்.