Loading...
அவுஸ்திரேலியா அரசு அகதிகள் நிவாரணத்திற்காக 53 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசு அகதிகள் விவகாரத்தில் கடுமையான கொள்கைகளை பின்பற்றி வருகிறது.
கடந்த 2103-ஆம் ஆண்டுக்கு முன் வந்த அகதிகள் அங்கு உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர்.
Loading...
மனுஸ் தீவு முகாமில் தங்கியிருந்த போது கடும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், திட்டமிட்ட துன்பங்களை அனுபவித்ததாகவும் 1,905 பேர் அவுஸ்திரேலியா அரசு மீதும், முகாமை நிர்வகித்த இரண்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்கு விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், $53 மில்லியன் டொலரை நிவாரணமாக வழங்குவதாக அவுஸ்திரேலியா அரசும், இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
Loading...