இலங்கையின் வெள்ள நிவாரணப்பணிகளில் அமெரிக்க கடற்படைவீரர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கத்தினால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது
வெள்ள நிவாரண பணிகளின்போது கடந்த இரண்டு வாரக்காலப்பகுதியில் அமெரிக்கப்படையினர் குடிநீர் சுத்தம் செய்தல், பாடசாலைகளை மீண்டும் இயங்கவைக்கும் பணிகள் உட்பட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் யுஎஸ்எய்ட் நிறுவனம் 2.3மில்லியன் டொலர்களை நிவாரணப்பணிகளுக்காக வழங்கியுள்ளது.
இந்தநிலையில்; நேற்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் கடற்படை தளபதி ரவீந்திர விஜேரத்ன ஆகியோர், அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப்புடன் யுஎஸ்எஸ் லேக் எரிக் கப்பலுக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது கருத்துரைத்த அமரிக்க தூதுவர் கெசாப், வெள்ள அனர்த்தத்தின்போது இரண்டு நாட்டு படையினரும் இணைந்து செயற்பட்ட விதம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.