வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கைளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் இரண்டுநிறுவனங்கள் அவருக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை, பங்கு மற்றும் பரிவர்த்தனை திணைக்களம் என்பன வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக சகோதர ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் என்பன வெளிவிவகாரஅமைச்சின் கீழ் கையளிக்கப்பட்டமை தொடர்பாகவே பல்வேறு விமர்சனங்கள்முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளிலுள்ள தூதராண்மைக் குழுக்கள், லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் திறன்கள் கற்கை நிறுவனம், தேசிய கடல்சார் செயற்குழுச் செயலகம், தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை முதலான 5 நிறுவனங்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.