தினகரனை தொடர்ந்து சட்டமன்ற உறப்பினர்கள் சந்தித்து வரும் நிலையில்,சினிமா பிரபலம் ஒன்று தினகரனை சந்தித்து வந்துள்ளது..
சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுடன் மீட்டிங் போட்டதற்கே தினகரன் மேலிடத்தில் வாங்கி கட்டிகொண்டார்..இதற்கு என்ன ஆகுமோ??
தினகரனை பார்க்க வந்த சினிமா பிரபலம் யார்? எதற்கு தினகரனுடன் திடீர் மீட்டிங் போட்டுள்ளார்??
அந்த பிரபலம் வேறு யாருமில்லை காமெடி நடிகர் செந்தில் தான்..
டி.டி.வி.தினகரனை அடையாரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த திடீர் சந்திப்பிற்கு காரணம்??
தினகரனை சந்தித்தது தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் நல்லது நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும்,
தமிழக அமைச்சர்கள் புற வாசல் வழியான கொல்லபுறம் வழியாக சென்றால், அப்படியே வேலூர் ஜெயிலுக்குத்தான் செல்லவேண்டும் என வார்னிங் செய்துள்ளார்..
அமைச்சர்களே இரண்டு, மூன்று பதவிகளில் வகிக்கின்றனர் என்றும் மேலும் அதனை சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பகிரந்தளித்தால் மக்கள் சேவை விரைவில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்..
பதவி ஆசையில் பளுவை அதிகரிக்க வேண்டாம் என்று சொல்லவருவார் போலும்..
மேலும் தமிழ்நாட்டின் நிலையாமை காரணமாக,
ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்,வந்தால் நல்லது தான். அவர் இந்தியர் தானே வரலாம்..
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.