தமது குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டால் அது எதிரணிக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கட்சிக்குள் தற்போது பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், அவர் தனது குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் மாத்திரம் தன்னை வந்து சந்தித்ததாகவும் ஏனைய அமைச்சர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தன்னை சந்திக்காமை வருத்தமளிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தமது குடும்பத்திற்குள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும், அவ்வாறு சண்டை இடுவதால் பா.ஜ.க.வும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் நன்மை அடையும் என்றும் சசிகலா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.