சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை 60 இடங்களில் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள லூட்ரி நகரில் ஐயர்லாந்து நாட்டை சேர்ந்த 50 வயதான கணவர், ரஷ்யாவை சேர்ந்த 46 வயதான மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
பெண்கள் மீது அதீத மோகம் கொண்ட கணவர் அடிக்கடி இணையத்தளங்களில் ஆபாசப்படங்களை பார்த்து வந்துள்ளார்.
வீட்டிற்கு விருந்தாளிகளாக வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் கணவர் அத்துமீறி நடந்து வந்துள்ளார்.
கணவரின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மனைவி அவரை விட்டு பிரிந்து விட பல முறை தீர்மானித்துள்ளார். ஆனால், கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை.
கணவனின் வார்த்தையை மீறி மனைவி வீட்டை விட்டு வெளியேறும்போது, கணவன் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டு மனைவியை மிரட்டி வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ள நிலையில் மனைவி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
மனைவியின் செயலால் ஆத்திரம் அடைந்த கணவர் இரண்டு கத்திகளை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
மதுபோதையில் இருந்த நிலையில், மனைவியின் உடலில் 60 இடங்களில் குத்தி கொலை செய்துள்ளார். பொலிசார் வருவதற்கு முன்னர் தற்கொலை செய்துக்கொள்ளவும் முயன்றுள்ளார்.
ஆனால், பொலிசார் விரைந்து வந்ததால் கணவரை கைது செய்துள்ளனர். கணவர் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
வாட் மாகாணத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தபோது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.