ஸ்காட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமியின் கனவை அவரது பெற்றோர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இதனால் அவரது பெற்றோர்கள் Eileidh Paterson-ன் திருமணக் கனவை நிறைவேற்றியுள்ளனர். Eileidh Paterson-க்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதனால் அவரது நெருங்கிய நண்பரான Harrison Grier(6) – ஐ நேற்று திருமணம் செய்து வைத்து ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
இவர்களது திருமணம் அங்குள்ள Aberdeen-பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் இரு வீட்டார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு சிலர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீரும் வடித்தனர்.
இந்நிகழ்வின் போது மணமகளான Eileidh Paterson தனது சகோதரர் கையை பிடித்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு மகிழ்ச்சியாக நடந்து வந்தார்.
அப்போது மணமகனான Harrison Grier வந்தார். அதன் பின் இருவரும் தங்கள் கையை பிடித்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து திருமணம் கோலகலமகாக நடந்து முடிந்தது.
இது குறித்து Eileidh Paterson-ன் தந்தை Billy கூறுகையில், இது ஒரு புதுவிதமான திருமணம் தான், ஆனால் இந்த திருமணத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறியுள்ளார்.
அவரது தாய் Gail கூறுகையில், தனது மகள் neuroblastoma என்ற அரிய வகை புற்றுநோயின் தாக்கத்தால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாள்.
ஒவ்வொரு நிமிடமும் அவள் அந்த நோயுடன் போராடி வருகிறாள். வரும் சனிக்கிழமை அவளுக்கு இரத்தம் மாற்றுதல் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறோம்.
இதனால் அவளது கனவை நிறைவேற்றிவிடுவோம், தன் சக நண்பர்களுடன் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு என்று கூறியுள்ளார்.