ஜேர்மனியில் உள்ள Cologne நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு சுரங்கப்பாதையில் வீடில்லாத பிச்சைக்காரர்கள் சிலர் வசித்து வந்துள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் இடத்தை கைப்பற்றுவதில் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீடில்லாத ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் மற்றொரு பிச்சைக்காரரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இருவரும் சேர்ந்து தாக்கியதில் பிச்சைக்காரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இக்குற்றத்தை மறைக்க இருவரும் திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
சடலத்தை ஓரிடத்தில் கிடத்தி அதன் மீது கட்டைகளை போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தை பார்த்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். பொலிசார் சென்று பார்த்தபோது பிச்சைக்காரரின் உடல் பாதியாக எரிந்து உயிரிந்து காணப்பட்டுள்ளார்.
கொலைக்கு காரணமான இருவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
‘நபர் தன்னை கற்பழிக்க வந்ததால் தான் அவரை கொலை செய்ததாக’ பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், விசாரணையில் இருவரின் வாதமும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு வீடில்லா பிச்சைக்காரர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த தகராறில் மட்டும் 17 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.