சிவாலய வழிபாட்டால் சிறப்புகளைக் காண வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவச் செலவு குறையும்.
உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். உதிரி வருமானம் வந்தாலும் செலவுகள் கூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் வெற்றிகாண்பீர் கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
வங்கிகளில் வைப்புநிதி உயரும் நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
வரவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். பெற்றோர் வழியில பிரியம் கூடும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும்.
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். விரயங்கள் கூடும்.
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். சகோதர வழியில் பகை உருவாகலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.
நந்தீஸ்வரர் வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். பொருளாதார நிலை உயரும். நண்பர்களின் நல்லாதரவோடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர் உதவி கிடைக்கும்.
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
பகை விலகும் நாள். நண்பர் களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களைச் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். உறவினர்கள் பாராட்டும் விதத்தில் நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் அமையும். வேலைப் பளு குறையும். வாகனச் செலவு உண்டு.
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள விரும்புப வர்களுக்கு வாய்ப்பு தேடிவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும் திருமண முயற்சி கைகூடும்.