முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியாக சதிமுன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றியஜனாதிபதி,இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையைகட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தைமுன்னெடுப்பதாக தெரிவித்தார்.
முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில்பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08ஆம்திகதி ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அந்த பொறுப்புக்களைஉரியவாறு நிறை வேற்ற பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.