Loading...
கர்ப்பமான பெண்களின் உடலில் நீர்ச்சத்து மிகவும் அவசியம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே கர்ப்பிணி பெண்களின் உடலில் கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைவாக இருக்க அதிக வாய்ய்புள்ளது. அதனால் அவர்கள் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Loading...
ஏனெனில் கோடைக் காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் அனைத்தும் வாந்தி மற்றும் வியர்வை வழியாக வெளியேறிவிடும். இதனால் அவர்களின் உடல் பலவீனமாக வாய்ப்புள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு நீர்ச்சத்து எதற்காக பயன்படுகிறது?
கர்ப்பிணி பெண்களின் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தால், குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும். அதனால் குழந்தையின் உடலில் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இதனால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியவை
- அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
- மோர், இளநீர், பழச்சாறு, கஞ்சி போன்றவை குடிக்க வேண்டும்.
- மாதுளை, சாத்துக்குடி, தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை
- ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- ஐஸ் கிரீம், சிப்ஸ், வறுத்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடக் கூடாது.
- கர்ப்பிணிகள் இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தக் கூடாது.
- தினமும் தலை மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Loading...