விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 61 படத்தின், First Look இன்று மாலை வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களோடு சத்யராஜ், கோவை சரளா, வடிவேலு, SJ சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிக பெரும் அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படத்தின் First Look விஜயின் பிறந்த நாளான நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே வெளியிடப்படும் என அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் First Look இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் First Look வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை போல், பல்வேறு நெட்டிசன்களும் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.