சல்மான் கான் அவரின் தன்னிச்சையான தன்மைக்கு பெயர் போனவர். நேற்று இரவு, மெஹ்பூப் ஸ்டுடியோவில் டூல்பைட்டை ப்ரொமோட் செய்ய சென்ற அவர். அங்கிருந்து கத்ரீனா கைபின் ஜிகா ஜாசோஸை ப்ரொமோட் செய்ய சென்றார்.
அப்போது சல்மான் கான் ஒரு ஆட்டோவில் பயணித்து தன் வீட்டுக்கு சென்றார். அவர் ஆட்டோவில் பயணித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. சல்மான் கான் ஆட்டோவில் பயணிப்பது இதுவே முதற்முறை இல்லை.
இன்றைய நாளில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருந்தாலும் அவர் சைக்கிளில் பயணிப்பது, அடிக்கடி பொது போக்குவரத்தையே பயன்படுத்த விரும்புகிறார். சல்மானை வீட்டில் கொண்டு போய் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறுகிறார். மேலும் சல்மான் கான் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் தெரியுமா?
ஒரு சவாரிக்கு ஆயிரம் ரூபாய் ! இதை தான் பெரிய இதயம் கொண்டவர் என்று சொல்லுவார்கள் போல.