சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொண்ட இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் 4ஆவது மற்றும் 5ஆவது வீரராக முறையே யுவராஜ் மற்றும் டோனி இடம்பெற்றிருந்தனர்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் சீனியர் வீரர்களான டோனி மற்றும் யுவராஜ் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது.
அதற்காக வலுவான இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு மூத்த வீரர்களான டோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் நிலை குறித்து பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும்.
இந்திய அணியில் அடுத்த 2 ஆண்டுகளில் இவர்களின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுக்க இதுவே சரியான தருணம்.
எதிர்காலத்தில் நடைபெறும் தொடர்களில் அவர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தினை தேர்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.