கிளிநொச்சி – நெடுந்தீவு கடற்பரப்பில் உள்ளூர் இழுவைப் படகுகளின் தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நெடுந்தீவு மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி – நெடுந்தீவு கடற்தொழிலை வாழ்வாதாரமாக் கொண்டு 750 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
கடந்த காலங்களில் இந்திய இழுவை படகுகளினால் பாதிக்கப்பட்ட தாம் தற்போது உள்ளூர் இழுவைப் படகுகளினால் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி – நெடுந்தீவு கடற்பரப்பில் நாள் ஒன்றிற்கு 300 உள்ளூர் இழுவைப் படகுகள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவதாக தெரிவிக்கும் மீனவர்கள், இதனால் கடல்வளம் மற்றும் தமது தொழில் நடவடிக்கை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
கடற்தொழில் அமைச்சே இழுவைமடி தடைச்சட்டம் ஏன் இழுபறியில் உள்ளது, நெடுந்தீவு கடலை நம்பி 750 குடும்பங்களின் நிலை என்ன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் நெடுந்தீவு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 350 மீனர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.