அரச ஊடக நிறுவனங்கள் சிலவற்றின் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சுதர்ஷன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
ஆனால் சுயாதீன தொலைக்காட்சியின் புதிய செயல் பணிப்பாளராக விமல் கெட்டபேஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளதுடன், செலசீனே நிறுவனத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கிறிஷ்சாந்த குரே நியமிக்கப்பட உள்ளதுடன், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காவன் ரத்நாயக்க, இலங்கை சுற்றுலாச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.