கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற இளம் பெண்ணை, அவனது காதலன் தெருவில் பிச்சையெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேலூர் சங்கரன்பாளையத்தில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தவர் பிரியா. இவருக்கு சுரேஷ் என்ற கணவர் உள்ளார். அதைத் தொடர்ந்து இவர்களுக்கு பத்து மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் பிரியா, தனது கணவரை ஏமாற்றி விட்டு, காதலனான மல்லன் என்பவருடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியாவிற்கு வேலை இல்லாததால், மல்லன் அவரை கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார்.
அவரை மட்டுமின்றி அவரது குழந்தையையும் கொடுமைபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் மல்லன் இருவரையும் கோவில் கோவிலாக பிச்சை எடுக்க வைத்துள்ளான்.
இது குறித்து பிரியா கூறுகையில், தான் மற்றொருவருடைய மனைவி என்று தெரிந்தும், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று, நான் இல்லை என்றால் இறந்துவிடுவேன் என்று கூறினார்.
அதன் பின் இரண்டு வருடங்களாக நீ இன்னொருவரின் மனைவி என்று கொடுமைபடுத்தினார். அதுமட்டுமின்றி குழந்தையை வைத்து தமிழகத்தின் சில இடங்களில் பிச்சை எடுக்க வைத்ததாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், தன்னுடைய பத்து மாத குழந்தையை யாரோ விலைக்கு கேட்பதாக கூறியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தான் கடைக்கு சென்ற நேரத்தில் தன்னுடைய குழந்தையை எடுத்துச் சென்று விட்டதாகவும், தற்போது குழந்தை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை என்று கண்ணீர் வடித்துள்ளார் பிரியா.
இது தொடர்பாக பிரியா பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.