ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சேவைகளை வழங்கிய நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்தது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்கவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இதனை அறிவித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ச அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் சில வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணம் தொடர்பாக அறிக்கைகளை கோரியுள்ள போதிலும் அந்த அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இந்த விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கையை தாக்கல் செய்ய தினம் ஒன்ற வழங்குமாறு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.