அஜித்ஜின் 57வது படமான ‘விவேகம்’ கேரள விநியோக உரிமையை புலிமுருகன் தயாரித்த முலகுப்படம் பிலிம்ஸ் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமை விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
தமிழகத்தின் பெரும்பான்மை ஏரியாக்கள் விற்கப்பட்டுவிட்டன. மற்ற மாநில உரிமைகளுக்கும் ஏகப் போட்டி நிலவுகிறது.இப்படத்தின் கேரள உரிமையைப் பெரும் விலைகொடுத்து வாங்கியுள்ளது முலக்குப்படம் பிலிம்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் தான் சமீபத்தில் பெரும் வசூல் சாதனை புரிந்த ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்தது. விவேகம் படம் மூலம் பெரும் வசூல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’ படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்தது. இதனால், ‘விவேகம்’ படத்துக்கு தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ளது.சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘சர்வைவா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘விவேகம்’ படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. அஜித் டப்பிங் பேச வேண்டியதுதான் பாக்கி. மேலும், அஜித்குமாரின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவா தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன. மேலும், அஜித்தின் கால்சீட்டுக்காக மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு தல58 வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள். அஜித் தின் அடுத்த படத்தை இயக்கம் இயக்குனர் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.