சிக்கன் சாப்பிட ஒரு வாரம் லீவு வேண்டும் என ரயில்வேயில் பணியாற்றும் ஒருவர் விடுமுறை விண்ணப்பம் அளித்துள்ளது வைரலாகி வருகின்றது.
நம்மில் பலரும், உடல்நிலை சரியில்லை, அல்லது சுற்றுலா, வெளியூர் செல்வதற்காக, தான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் விடுமுறை கேட்பது வழக்கம். ஆனால் சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீப்கா என்பவர் மிகவும் வித்தியாசமாக கோழிக்கறி சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை கேட்டுள்ளார்.
ஆம், சர்வான் என்ற இந்து பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் போது கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகை தொடங்கியதும், ஒரு மாதத்திற்கு அசைவ உணவை சாப்பிடக் கூடாது என்பது வழக்கம்.
இதன் காரணமாக தீப்கா என்பவர், அடுத்த மாதம் முழுவதும் என்னால் அசைவம் சாப்பிட முடியாது. இதனால் தான் கோழிக்கறி சாப்பிட்டு என் உடல் வலிமையை அதிகரிக்க வேணும். இதனால் தனக்கு ஒரு வாரம் (ஜூன் 20-27) விடுமுறை வேண்டும் என தன் உயர் அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளார்.
இவரின் விண்ணப்பம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.