Loading...
தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவர் சீர்வரிசைகள் மற்றும் ரொக்கப் பணம் போன்றவைகளை எடுத்து மாயமாகியுள்ளார்.
நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
திருமணத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மணப் பெண்ணை காணவில்லை.
Loading...
அவருடன் மாப்பிள்ளை வீட்டாரின் சீர்வரிசைப் பொருளாக கொடுக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணங்கள் போன்றவைகளும் காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக மணமகளின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading...