இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்று பெயர் பெற்றவர் யுவராஜ் சிங். இந்திய அணி இரண்டு வித உலகக்கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
தற்போது இவர் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.
இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் சமீபத்தில் யுவராஜ் சிங் மற்றும் டோனி ஒரு நிலையான முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் யுவராஜ்சிங் தனது 400-வது சர்வதேச கிரிக்கெட் போட்டியை மேற்கிந்திய தீவில் விளையாடினார்.
400-வது போட்டி என்பதால் அவரது மனைவியான ஹேஸல் கீக் தனது இன்ஸ்டிராகிராமில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஏற்ற வகையில் யுவராஜ் சிங்கிற்கு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. 400-வது போட்டி என்பதால் யுவராஜ் சிங் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகம் இருந்தது.
ஆனால் யுவராஜ் சிங்கோ கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் 10-பந்துகளில் 4-ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார்.
தொடர்ந்து சொதப்பி வரும் யுவராஜ் சிங் மேற்கிந்திய தீவு தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அடுத்த தொடர்களில் எதிர்பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.