அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் முறைகேடாக செயற்பட்டதாக கூறப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஒரு தரப்பு அரசியல் தலைமைகள் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை அரசின் மீது முன்வைத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இது குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் கதறியும் அதனைப் பொருட்படுத்தாது பொலிஸார் வெறித்தனமாக தாக்கியதாக கூறப்படுகின்றது.
மாணவர்கள் போராட்டத்தில் தெரியாத பக்கம் என்ற வகையில் விஷேட பொலிஸ் படையினர் மாணவர்களை தாக்கும் காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் பொலிஸார் மாணவர்களை தாக்குவது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியை அடிப்படையாகக் கொண்டுபொலிஸாரின் முறைகேடான தாக்குதல் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை இந்தப்போராட்டத்தில் மாணவர்கள் முறைகேடாக நடந்து கொண்டார்கள் என நல்லாட்சி அரசு தரப்பின் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாணவர்களை குறை கூறவில்லை எனவும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.