Loading...
முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். அவற்றைப் பற்றி சில பயனுள்ள தகவல்கள் இதோ..
Loading...
- மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.
- பிரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம். உடல் குளிர்ச்சியாவதுடன் முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தல் வளரத் தொடங்கும்.
- கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து, பொடித்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும். நன்றாக வளரும்.
Loading...