அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸ் அறிக்கைகளில் பெயர் எழுதப்பட்ட எந்தவொரு நபரையும் அரச சேவைகளில் இணைத்து கொள்வதை தவிர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பொறியியலாளர், வைத்தியர், நிர்வாகம் போன்ற பதவிகளிலும், அரசாங்க சேவைகளிலும் இணைத்து கொள்ளப்பட மாட்டார்கள்.
அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளும் பரீட்சையில் அந்த நபர் அதிக புள்ளியில் தேர்ச்சி பெற்றாலும், அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பொலிஸ் அறிக்கைகளில் பெயர் பதிவாகியிருந்தால், அவர்களை அரசாங்க சேவையில் இணைத்து கொள்வதனை தடை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் கடந்த நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களை கடுமையாக சேதப்படுத்தியமை மற்றும் கோடிக்கணக்கான பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.