Loading...
முல்லைத்தீவு –மாதிரி கிராமத்தில் யுவதி ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள முயற்சித்துள்ளதால் அங்கே தற்பொழுது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேப்பாப்புலவில் மாதிரிக்கிராமத்தில் முன்னர் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கும் போது இந்த இராணுவச் சிப்பாய்க்கு கேப்பாப்புலவு யுவதி ஒருவர் மீது ஒரு தலைக் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது அந்த யுவதியை திருமணம் செய்து கொள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
சம்பவம் தொடர்பில் கேப்பாப்புலவு மக்கள், முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Loading...