எட்டப்பனை நினைவு வைத்திருக்கும் பலரும் மருதநாயகம் எனும் மாவீரனை மனதில் நிறுத்தத் தவறி விட்டனர் என்பது வேதனை.
மாவீரர்கள் மரணிப்பது இல்லை… உண்மையான கடைசித் தமிழன் இருக்கும் வரைக்கும் அவன் வீரப்புகழும் நிலைத்து இருக்கும்.
ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரத்தமிழன் மருத நாயகத்தை இன்று பலர் மறந்து விட்டனர். அடிமை எண்ணமும், கோழைத்தனமும் கொஞ்சம் கூட இல்லாத தனித்துவ வீரன்.
மருதுநாயகம் இவன் கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப், முகம்மது யூசுப்கான் சாஹிப் எனப் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டவன்.
சிறுவயது முதலே வீரனாக வலம் வந்த மருதநாயகம், மருத்துவம், தையல், படகோட்டல், வித்தகர் என பல வித்தைகள் கற்றறிந்து இருந்தாலும், அவனது இலக்கு போர் வீரனாதல் என்பது மட்டுமே…,
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னன் பிாதாப சிம்ஹாவின் படையில் சேந்து பின்னர், பிரெஞ்சுப் படையில்சேர்ந்து போர்ப் புலியாக மாறினான் மருதநாயகம்.மருதநாயகத்தின் வரலாற்றை காணொளியில் காண்க…