இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் வெங்காயம். ஆஸ்துமா, சளி போன்றவற்றை குணப்படுத்தி பசியுணர்வை துண்டுகிறது.
வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்
வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.
நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்
- ஈரப்பதம் – 86.6%
- புரதம் – 1.2%
- கொழுப்புச்சத்து – 0.1%
- நார்ச்சத்து – 0.6%
- தாதுச்சத்து – 0.4%
- மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7%
என்ன பலன் கிடைக்கும்
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின்னர் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிட்டால் விஷம் இறங்கும். ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.