Loading...
காதலித்து கரம் பிடித்த கணவன் விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த மனைவி கணவன் வீட்டு முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் நகரை சேர்ந்தவர் விக்டோரியா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரிட்டோ என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொணடனர்.
Loading...
இதனை பிரிட்டோ குடும்பத்தார்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டோ, மனைவி விக்டோரியாவை விட்டு விலகி சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்டோரியா, பிரிட்டோ வீடு முன் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...