பிரித்தானியாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரு மகன்களின் சடலம் தாயின் முன்னால் புதைக்கப்பட்ட தருணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Leicestershire கவுண்டியை சேர்ந்தவர் David Stokes (43) இவர் மனைவி Sally.
இவர்களுக்கு Adam (11) மற்றும் Matthew (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில் David தனது வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக இருந்துள்ளார். அவரின் இரு மகன்களும் காணாமல் போன நிலையில், தற்போது ஏழு மாதத்துக்கு பிறகு அவர்களின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர், Adam மற்றும் Matthewவின் சடலத்தை ஒரே நேரத்தில் அடக்கம் செய்யும் இறுதி நிகழ்வு அவர்களின் தாய் Sally முன்னால் நடைப்பெற்றது. இதில் சிறுவர்களின் பள்ளிக்கூட நண்பர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
Matthewவின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் அவனுக்கு பிடித்த அயன்மேன், பேட்மேன் புகைப்படங்கள் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது. அதே போல, கால்பந்து விளையாட்டு ரசிகரான Adam-ன் சவப்பெட்டியில் லிவர்பூல் கால்பந்து கிளப்பின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
பிறகு சிறுவர்களின் தாய் Sallyயின் சார்பில் செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது. அதில், என் நண்பர்கள், Adam மற்றும் Matthewவின் நண்பர்கள், மற்றும் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டது.
மேலும், இந்த நிலைமையை உணர்ந்து செயல்படும் காவல் துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கடைசியாக சிறுவர்களின் தாய் Sally, இருவர் சடலம் வைத்திருக்கும் சவப்பெட்டியில் முத்தம் கொடுத்தது நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்தது.