இளம் காதலர்கள் ஓடிச் செல்லும் போது பெண் வீட்டு தரப்பினர் பின் சென்று கொடூர தாக்குதல்; பெண் மரணம்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 10-10.30 மணியளவில் மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் நடைபெற்றது. பெண் தன்னை திருகோணமலைக்கு பார்க்க வருமாறு காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்திருக்க காதலன் தனது நண்பனுடன் சென்றுள்ளான்.
இவர்கள் செல்லும் சமயம் பெண் வீட்டார் திருகோணமலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அச்சமயம் காதலன் தனது காதலி வரும் கார் ஐ இனம் கண்டு பின் தொடர்ந்துள்ளான்.
அப்போது தேனீர் குடிப்பதற்காக பெண் வீட்டு தரப்பினர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். காதலன் பெண்ணை பார்க்க அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் திடீரென வாகனத்தை விட்டிறங்கி காதலனுடன் ஏறி இருக்கிறாள்.
ஏறிய சமயம் காதலனும் அவனுடைய நண்பனும் என்ன செய்வதென்றறியாமல் பெண்ணை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து வேகமாக சென்றுள்ளனர்.
இச்சமயம் பிள்ளை வந்த கார் இவர்களை துரத்திக்கொண்டு பின் சென்றுள்ளது. வேகமாய் சென்ற கார் இவர்கள்கள் சென்ற மோட்டர் சைக்கிளில் முதல் தடவை பின் புறத்தில் மோதியுள்ளது.
மோதியதில் பின் இருந்த காதலனின் நண்பனுக்கு காலில் அடி பட்டு கால் உடைந்துளது. இவர்கள் இன்னும் வேகமாக செல்ல காரானது மறுபடியும் இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளாகிய போது மோட்டார் சைக்கிள் வேகமாக சென்று அருகில் இருந்த பாதசாரிகள் கடவை பலகையில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்த மூவரும் வீசி எறியப்பட்டனர்.
இதன் போது காரை விட்டு இறங்கிய பெண்ணின் பெரியப்பாவும் கார் சாரதியும் காதலனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
பெண்ணை காரில் ஏற்ற முற்பட்ட போது பெண் இயலாது என்று சொல்ல பெண்ணை இளைஞர்கள் அணிந்து வந்த தலைகவசத்தினால் தலையில் பலமாக தாக்குவதை அவளுடைய காதலன் தனது கண்ணால் கண்டுள்ளான்.
அச்சமயம் அவ்விடத்திற்கு விரைந்த அப்பிரதேச வாசிகள் கார் சாரதியையும் பெண்ணின் பெரியப்பாவையும் தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் காயமடைந்த மூவரையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு Ambulance வண்டி மூலம் அனுப்பிய பிறகு காரில் வந்தவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
அந்த யுவதி இறுதி வரை அவளின் காதலனான சஞ்சீவ் என்ற பெயரை உச்சரித்ததாக ஆம்புலன்ஸ் இல் சென்றவர் கூறினார்.
இறுதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் யுவதி அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாள். அதன் பின்பு பிரேத பரிசோதனைக்காக சடலம் குருணாகல் கொண்டு செல்லப்பட்டு ஞாயிறு வீட்டார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பலகாலமாக இருவரும் காதலித்துள்ளனர் என்பது தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. அவ் யுவதி சில தினங்களுக்கு முன்னமே இந்தியாவில் மேல் படிப்பை ஒரு வருடகாலமாக முடித்து விட்டு மறுபடியும் இலங்கை திரும்பியுள்ளமை விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டது.