முன்னணி தேடுபொறியாக திகழும் கூகுள் தேடலின்போது தனி நபர் தகவல்கள் பலவும் கிடைக்கப்பெற்று வருகின்றது.
இது தொடர்பான தணிக்கைகளை மேற்கொள்வதில் கூகுள் நீண்ட காலம் தாமதம் காட்டி வந்தது.
எனினும் தற்போது இப் பிரச்சினை தொடர்பில் மிக வேகமாக செயற்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக தனி நபர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் தொடர்பான தகவல்கள் கூகுள் தேடலின்போது கிடைக்கப்பெறுவதை முற்றாக தணிக்கை செய்ய முன்வந்துள்ளது.
இப் பிரச்சினை தொடர்பில் அரச சார்பு நிறுவனங்களும், ஏனைய நிறுவனங்களும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலேயே கூகுள் நிறுவனம் செயற்பட ஆரம்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் இந்தியா அதிகளவு மருத்துவச் சான்றிதழ்களை ஒன்லைனில் பதிவேற்றம் செய்திருந்தது.
இவை அனைத்தும் கூகுள் தேடலில் கிடைக்கப்பெற்றுள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.