பேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடிகளை கடந்துள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில் பேஸ்புக் முன்னனியில் உள்ளது.
இதன் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31ஆம் திகதி வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள மார்க், இன்று காலை வரை பேஸ்புக் சமூகத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளனர்.
உலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இதில் உங்களுடன் பயணிப்பது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் வளர்ச்சி மற்ற சமூக வலைத்தளங்களை விட பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும்.
நேரலை வீடியோ வசதி, கமெரா அம்சங்களில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களை மேலும் பேஸ்புக் கவர்ந்து வருகிறது.
மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் குறைவாக உள்ள பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்க வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.