Loading...
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாநாடு நாளையும் நாளை மறுதினமும் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. மாநாட்டுக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமை தாங்குவார்.
இதன்போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலான தற்போதைய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
Loading...
இதுதவிர தேசிய பாதுகாப்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்ததும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
சீனா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வளவாளர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டாளர் ராதிகா குமாரசுவாமியும் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது
Loading...