Loading...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் பட்டியலில் முதல் குற்றவாளியாக இருப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Loading...
தடையை மீறி குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆர்.கே. நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் குட்க விற்பனைக்கு லஞ்சம் பெற்ற அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். முதல்வர் இதனை செய்ய வேண்டும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். முதல்வரே முதல் குற்றவாளியாக இருக்கிறார் என்றார் மு.க.ஸ்டாலின்.
Loading...