மாத்தறை, கம்புருபிட்டி பகுதியில் இரண்டு பெண் சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் நேற்று காலை மீட்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற நாளன்று வீட்டில் இருந்த சகோதரி ஒருவர் அவரது, மூத்த சகோதரரான இளம் தேரர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன், போது “அண்ணா, அப்பா எங்களின் கைகளை கட்டி கொலை செய்வதற்கு முயற்சிக்கின்றார்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது கிடைக்கப்பெற்ற கடிதத்தில் தாங்கள் அனைவரும் சுயவிருப்பத்தின் பேரிலேயே தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தந்தை மற்றும் மகள்மார்கள் தங்கியிருந்த குறித்த வீட்டில் வன்கொடுமை சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னர் பொலிஸ் அவசர பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாத்தறை – கம்புருபிட்டிய – பெரளிஹதுர பகுதியிலிருந்து நேற்று அதிகாலை 44 வயது தந்தையும், அவரது 10 மற்றும் 16 வயது மகள்களும், 14 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
சடலங்களாக மீட்கப்பட்ட மூன்று சிறுவர்களையும், தந்தை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.