இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் மகனுடன் வாழ மறுத்த ஆத்திரத்தில் மருமகளை கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டம், சாய்டோ கிராமத்தை சேர்ந்தவர் அனிமா ஹாரியா. இவர் தனது கணவர் பைரவ் கெர்கெட்டாவுடன் ஏற்பட்ட பிச்னையால் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
இருவரையும் இணைத்து வைக்க பைரவ் கெர்கெட்டாவின் தந்தை முயன்றிருக்கிறார். ஆனால், அனிமா ஹாரியா சமரசம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மருமகளை சமாதானப்படுத்த பைரவ் கெர்கெட்டாவின் தந்தை முயன்றபோது, வார்த்தைகள் முற்றி கைகலப்பாகி இருக்கிறது.
அப்போது ஆத்திரத்தில் தாக்கியதில் அனிமா ஹாரியா இறந்துள்ளார். இதனை மறைத்து, அனிமா ஹாரியா விபத்தில் இறந்ததாகக் கூறி சமாளித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாமனார் தாக்கியதில் அனிமா ஹாரியா கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பைரவ் கெர்கெட்டாவின் தந்தையை கைது செய்த பாஸியா காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.