Loading...
நீரில் கரையும் தன்மை கொண்ட விட்டமின் C நிறைந்த உணவுகள் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
Loading...
வெள்ளரிக்காய், எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு, கீரை, புரோக்கோலி போன்ற காய்கறிகளில் விட்டமின் C அதிகமாக நிறைந்துள்ளது.
விட்டமின் C உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- விட்டமின் C நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்காலத்தில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கிறது.
- அதிக ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள், விட்டமின் C நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தப்படும்.
- நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை விட்டமின் C நிறைந்த உணவுகள் குறைக்கிறது. மேலும் இது அதிகப்படியான மன அழுத்த பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
- தினமும் நாம் சாப்பிடும் உணவில் விட்டமின் C நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால், நமது சருமம் ஆரோக்கியம் மற்றும் இளமை பாதுகாப்பகாக இருக்கும்.
- தினசரி விட்டமின் C நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் ஆறிவிடும்.
Loading...