Loading...
வாஸ்து சாஸ்திரங்கள், புராணங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றில் எந்தெந்த செயல்கள், துரதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை கொடுக்கும் என்பது குறைத்து நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.
Loading...
அதில், பறவைகளை கூண்டில் அடைப்பது நமக்கு அதிக பணக்கஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பறவைகளை கூண்டில் அடைப்பதால் துரதிர்ஷ்டம் ஏற்படுவது ஏன்?
- நம் வீட்டில் பறவைகளை கூண்டில் அடைத்து வைப்பது, ஒரு தீய அதிர்வுகளை உண்டாக்கும். அதனால் அந்த வீட்டில் உள்ளவர்களின் வாழ்வு வெற்றிடமாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
- செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பது தவறில்லை. ஆனால் அதற்காக கூண்டில் பறவைகளை அடைத்து வளர்க்கக் கூடாது. ஏனெனில் அதனால் தீய சக்திகள் அதிகமாகி, துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்.
- பறவைகள் ஒன்றாக சேர்ந்து வாழும் குணாதிசயம் கொண்டவை. எனவே இப்படிப்பட்ட உயிரை நாம் தன்னந்தனியாக கூட்டில் அடைத்து வைப்பது, ஒரு பாவமான செயலாக கருதப்படுகிறது.
- பறவைகளின் சுதந்திரத்தை பறித்து, அதை கூண்டிக்குள் தனிமையாக அடைத்து வைப்பதால், அப்பறவை ஒருவித அலுப்பு நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் இயற்கை குணத்தை இழந்து, ஆக்ரோஷ குணத்திற்கு மாறிவிடும்.
- வானத்தில் உயரமாக பறந்து, மகிழ்ச்சியாக இருக்கும் பறவையை கூண்டில் அடைத்து சோகத்தில் ஆழ்த்துவது, கர்மா போன்றதாகும். எனவே அச்செயல் அவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துமாம்.
Loading...