பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 100 பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் நகை மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சதாக் முஷ்தக்(28). இவர் பெங்களூரில் பல பெண்களிடம் உயர்பதவியில் இருப்பது போல் காட்டிக் கொண்டு, நட்பாக பழகி, அதன் பின் அவர்களை காதலிப்பது போல் நாடகமாடி, அவர்கள் மனதில் இடம்பிடித்து, அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி, அப்பெண்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு மாயமாகிவிடுவார்.
ஆனால் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் சதாக் முஷ்தக் மீது புகார் கொடுக்காதிருந்த நிலையில், பெங்களூருவின் பகலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை சதாக் முஷ்தக் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் சதாக் முஷ்தாக்கை பிடித்து பொலிசார் விசாரணை செய்த போது, அவன் இது போன்று 75 முதல் 100 பெண்களிடம் காதலிப்பது போல் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்துச் சென்றுள்ளான் என்பது தெரியவந்தது.
இதில் சில பெண்களை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பெண்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை அவன் 2007-ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பித்துள்ளான் என்றும் தெரியவந்துள்ளது.