பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள்.
பாராட்டும், புகழும் கூடும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.
நிதி நிலை உயரும் நாள். சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்ளின் சந்திப்பு கிட்டும்.
தொகை வரவு திருப்தி தரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவ முன்வருவர். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நல்ல காரியங்கள் செய்வதில் நாட்டம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்று விரும்புவீர்கள்.
மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும் நாள். தொட்ட காரியத்தில் வெற்றி ஏற்பட துணையாக இருப்பவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். சுற்றத்தார்களால் நன்மை உண்டு. வழக்கமான பணிகளை இன்று மாற்றி அமைப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.பயணங்களால் பலன் உண்டு. பாக்கிகள் வசூலாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கட்டிடப் பணி தொடரும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாள்வது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அரைகுறையாக நின்ற பணியை அவசரமாக முடிக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தந்தைவழி உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்துதவுவர்.
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். விவாகப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். தெய்வீக சிந்தனை மேலோங்கும்.