பிரபல திரைப்பட நடிகையான பாவனா கடந்த பிப்ரவதி மாதம் கேரளாவில் ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்கரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பல்சர், சுனில் உள்பட 7 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதற்கு திலீப் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தனது தொடர்பு குறித்து வெளியில் கூறாமல் இருப்பதற்காக திலீப் ஒன்றரை கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த வேளையில், சிறையில் இருக்கும் சுனில் தமக்கு கடிதம் எழுதியதாகக் கூறி நடிகர் திலீப் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கடிதம் எழுதியது குறித்து சுனிலிடம் விசாரணை மேற்கொண்ட போது, இந்த வழக்கிற்கும், திலீப்பிற்கு சம்பந்தம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் இப்புகார் குறித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்ற திலீப்பிடம், பத்திரிக்கையாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
இதற்கு அவர் தன்னை இவ்வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.