புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சாட்சியமளிக்க மன்றில் முன்னிலையாகாத ஒருவருக்கு ட்ரயலட் பார் மன்று பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கின் 32வது சாட்சியாளருக்கு இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளைய தினத்திற்குள் சாட்சியாளரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையின் மற்றுமொரு சாட்சியாளருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதிக்கு முன்பாக மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு பிணை முறித்தேவையில்லை என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கோரியதை ஏற்றுக்கொண்ட மன்று, ஒரு லட்சம் ரூபா சரீர பிணையிலும், ஒரு லட்சம் ரூபா ஆட்பிணையிலும் வெளியில் செல்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.