இலங்கை விமானச் சேவையில் முதற்தடவையாக, எமிரேட்ஸ் விமான நிறுவனம் , ஏ380ரக இரட்டைத் தள எயர்பஸ் விமானம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது . கொழும்பு நோக்கிய இப் புதிய சேவை ,ஆகஸ்ட் 14 அன்று ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இது வாரத்திற்கு ஒரு தடவை இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ள விமானப் போக்குவரத்து அமைச்சு அதிகாரி ஒருவர் , பயண நடுவில் மத்திய கிழக்கு நாடொன்றில் தரித்து நிற்கும் பயணமாக இது அமையும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார் .
கடந்த ஏப்ரிலில் , கட்டுநாயக்க விமான நிலய ஓடுபாதை விஸ்தரிக்கப்படதைத் தொடர்ந்தே , இந்தப் புதிய சேவை சாத்தியமாகி இருக்கின்றது .
உலகின் இரு இராட்சத விமான உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான எயர்பஸ்ஸின் இந்த விமானம் அகன்ற கட்டமைப்பையும் , இரட்டைத் தளங்களையும் கொண்டுள்ளதோடு , நான்கு என்ஜின்களைக் கொண்ட ஜெட் விமானமாகத் திகழும் .
853 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய A380-800 ரக விமானத்தின் மேற்தளத்தில் 315 பயணிகளயும், கீழ்தளத்தில் 538 பயணிகளும் இருக்க முடியும் .
பயணிகளைக் கொண்டு செல்லும் உலகின் மிகப் பெரிய ஜெட் விமானம் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.