பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை ஈரான் மீறியமை தொடர்பில் ஐ.நா எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது செயலற்றிருப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நாவின் தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பாதுகாப்புச் சபை கவுன்சில் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போது, “ஐ.நாவின் தீர்மானங்களை மீறுவது தொடர்பில் நாம் இனிமேலும் பொறுமை காக்க மாட்டோம் என ஈரானுக்கு காட்ட வேண்டும்” என தெரிவித்தார்.
அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 18 மாதங்களுக்கு முன்னதாக உலகின் முக்கிய சில சக்திகளுடன் ஈரான் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
எனினும் குறித்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படாத சில விடயங்களை ஈரான் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.