பெண்ணை மிரட்டி இரண்டு வருடமாக பாலியல் வன்கொடுமை புரிந்த ஃபேஸ்புக் சாமியாரை போலீசார் தேடிவருகின்றனர்.
தானே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 39. தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது தந்தைக்கு புற்றுநோய்.
சுதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் சாய்லால் ஹிராலால் (50) என்பவர் அறிமுகமானார். தன்னை சாமியார் கூறிக்கொண்ட சாய்லால், புற்றுநோய் எல்லம் எனக்கு சவாலே இல்லை, சீக்கிரமே குணப்படுத்திவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
இதை நம்பி, சுதா அவருடன் பழகினார். பிறகு சுதாவை நேரில் சந்தித்த லால், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை காணொளி எடுத்தார். தனக்குஉடன்படவில்லை என்றால் காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கடந்த 2 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.