பொதுவாகவே காதலிப்பவர்களை பார்த்து சிலரின் மைண்ட் வாய்ஸ் காதலுக்கு கண்களில்லை என்பதாக தான் இருக்கும். இந்த வாக்கியத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஓரிரு நாட்களுக்கு முன்னர் தென் சுமத்திரா பகுதியில் ஒரு காதல் திருமணம் நடந்துள்ளது.
அந்த சம்பவம் உலகம் முழுக்க வியப்பை அளித்து புருவத்தை உயர்த்த செய்துள்ளது. அதற்கு காரணம் மணமகன் (செலாமட் ரியாடி ) வயது 16, மணமகள் (ரோஹாயா) வயது 71.நினைத்து பார்க்கும் போதே பலருக்கு மாரடைப்பை தரும் இந்த நிகழ்வு. தென் சுமத்திராவில் சாத்தியமாகியுள்ளது. 16 வயது நிரம்பிய அந்த பாலகன், 71 வயது நிரம்பிய மூதாட்டியை திருமணம் செய்துள்ளான். அதுவும் காதலித்து.
இதில் ஆச்சர்யம் ஏற்படுத்தும் விடயம் என்னவென்றால் தங்கள் இரு குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கி, அவர்களை ஆசுவாசப் படுத்தி தான் இவர்கள் திருமணம் செய்துள்ளனர். இந்த விசித்திர திருமணம் அருகாமையில் இருந்த குச்வோயோ என்பவரது வீட்டில் இவர்களுடைய திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
இந்த விசித்திர திருமணத்தில் அந்நாட்டு பண மதிப்பில் இரண்டு இலட்சம் என்ற அளவில் வரதட்சனை வேறு கொடுத்துள்ளனர். அதுவும் திருமணத்திற்கு முன்பே.