வடமேற்கு ரஷ்யாவின் ஸ்கொட்நோயோ என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசய குதிரை பிறந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் எலெனா சிஸ்ட்யாகாவா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் வளர்த்துவரும் குதிரை குள்ளமாக இருக்கக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. அது கடந்த மாதம் மிகவும் குட்டியான குதிரையைப் பெற்றெடுத்தது. அதற்கு நான் குலிவர் என்று பெயரிட்டுள்ளேன். குலிவரின் உயரம் ஒரு பூனையின் உயரத்தைவிடக் குறைவு. ரஷ்யாவிலேயே இதுதான் குள்ளமான குதிரையாக இருக்கும்.
சுற்றியுள்ள மக்கள் ஆச்சர்யத்துடன் குலிவரைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். உலகின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வந்து குலிவரைப் பார்வையிடுகின்றனர். குலிவர் பிறந்தபோது 31 செ.மீ நீளம் இருந்தது.
மேலும் 55 செ.மீட்டருக்கு மேல் வளராது என்று விலங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கின்னஸ் குழுவுக்குக் குலிவரின் பெயரை அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார் பூரிப்புடன்.